தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்(நாம்)
கங்கை காவிரியை இணைப்போம்!
மதுவை ஒழிப்போம்!
வாழ்க விழிப்புடன்!
“நாம்” வெல்லட்டும்!
நாடு செழிக்கட்டும்!
விவசாயிகளே! வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்தும் மூலதனம்
“நாம்” வென்றிடும்! நாடு செழித்திடும்!!
தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் (ஜாதி, மத சார்பற்றது)
நோக்கங்கள்
விவசாய விழிப்புணர்வு
தக்க நேரத்தில் உரிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்துதல்.
பொருளாதார மேம்பாடு
விவசாயக் குடும்பங்களை மற்ற துறையினருக்கு ஈடாக பொருளாதாரத்தில் உயர்த்துவது.
சுய வேலை வாய்ப்பு
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு சுய வேலை வாய்ப்பை உருவாக்குதல்.
நதி இணைப்பு முயற்சி
அனைத்து நதிகளையும் இணைக்கப் பாடுபடுவது.
நாம் செயல்பாடுகள்
செயல்பாட்டை காட்டுங்கள், சித்தாந்தத்தை அல்ல.
ஜனநாயக போராட்டங்கள்
விவசாயிகளின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கூட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்துதல்.
விரைவான தீர்வுகள்
தேசிய தலைவரின் தனித்துவமான அணுகுமுறை மூலம் அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விரைவான தீர்வுகளைக் காணுதல்.
காப்பீட்டு உதவிகள்
குறைந்த பிரீமியத்தில் ஆயுள் காப்பீடு, பயிர் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீடு பெற விவசாயிகளுக்கு உதவுதல்.
“நாம்” உழவர் விவசாய மாத இதழ்
இது வியாபார நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இதழ் அல்ல. அரசின் திட்டங்கள் விவசாயிகளைச் சென்றடையவும், அரசிடம் விவசாயிகளுக்கு தேவையானவற்றை பெற்றுத்தருவதும் எமது இதழின் கடமையாகும்.
அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைய...
அரசின் திட்டங்கள் விவசாயிகளைச் சென்றடையவும் அதை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் வழிகாட்டுதல்.
இயற்கை வேளாண்மை மற்றும் ஆரோக்கியம்
இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குவது குறித்த தலைவர்களின் கட்டுரைகள்.
விவசாயிகளுக்கான சட்ட உரிமைகள்
தேசிய தலைவர் D.R. கார்த்திகேயன் ஐ.பி.எஸ் அவர்களின் விவசாய விழிப்புணர்வு தொடர்.

